Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்கள் மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்தை விரும்பவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற பகுதிகளில் வெடிபொருட்கள் மீட்கப்படுவது சர்வசாதாரண விடயம். ஆனால், சாவகச்சேரி சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது. தமிழரின் ஆயுதப் போராட்டம் மீண்டும் தலைதூக்கப் போகின்றது என்று தெற்கில் உள்ள சிலர் ஊளையிடுகின்றனர். இது வேடிக்கையானது. மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தமிழ் மக்கள் விரும்பவில்லை. ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடி உரிமைகளைப் பெறவே எமது மக்கள் விரும்புகின்றனர்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாவகச்சேரியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவத்தின் உண்மை நிலை விசாரணையின் பின் வெளிவரும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

சாவகச்சேரி மறவன்புலோ பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து தற்கொலைத் தாக்குதலுக்கான அங்கி மற்றும் கிளைமோர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டன.

இந்தச் சம்பவத்தையடுத்து குறித்த வீட்டில் தங்கியிருந்த குடும்பஸ்தர் ஒருவர் கிளிநொச்சியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்காகக் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to தமிழ் மக்கள் மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்தை விரும்பவில்லை: சுமந்திரன்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com