மகிந்த ராஜபக்ஷவின் சொந்த ஊரான அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை நகரில் ஜனாதிபதியின் குடும்பத்தாரை விமர்சிப்போர் மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்துவதாக ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
தங்காலை நகரில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தையும், அவரது நண்பர் கடந்த வாரம் தங்காலை நீதிமன்ற வளாகத்தில் வைத்து துப்பாக்கிச் சூட்டில் காயத்துடன் தப்பிய சம்பவத்தையும் சுட்டிக்காட்டிய மங்கள சமரவீர, இந்த சம்பவங்களுடன் ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஷவுக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜனாதிபதியின் சொந்த வீடு அமைந்துள்ள அதியுயர் பாதுகாப்புப் பிரதேசமான தங்காலையில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு நடத்த கொலையாளிகளால் எப்படி முடிந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனாலும், அரசாங்கத்தின் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவும் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர சுமத்துவது பாரதூரமான குற்றச்சாட்டு. சாட்சியங்களை மறைப்பதும் சட்டவிரோதமானது. எந்த நேரத்திலும் அவர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குச் சென்று சாட்சியங்களை முன்வைக்கலாம் என்று கெஹலிய ரம்புக்வெல பி.பி.சி.யிடம் தெரிவித்துள்ளார்.

0 Responses to அம்பாந்தோட்டை துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்; நாமல் ராஜபக்ஷ மீது மங்கள சமரவீர குற்றச்சாட்டு!