Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக சட்டப்பேரவைக்காக நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்தல் வாக்களிப்புக்குப் பின்னர் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புக்களில் திமுக ஆட்சியமைப்பதற்கான வாய்புக்கள் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் உள்ள 232 தொகுதிகளில் நேற்று காலை 07.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவில்லை.

தமிழகம் முழுவதும் 73.84 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், செய்தி ஊடகங்கள் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளன.

இதில் சிவோட்டர் நிறுவனம் மட்டும் அதிமுக 139 இடங்களைப் பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் திமுகவுக்கு 78 இடங்கள் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என மூன்று நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சாணக்கியா 140 இடங்களையும், ஏபிபி நீல்சன் 132 இடங்களையும், டைம்ஸ் நவ் தொலைக்காட்சி 117 இடங்களையும் பெற்று திமுக ஆட்சி அமைக்கும் என கூறியுள்ளன.

0 Responses to வாக்களிப்புக்குப் பிந்திய கருத்துக் கணிப்பு முடிவுகளில்; திமுக ஆட்சியமைக்க வாய்ப்புக்கள் அதிகம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com