Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பகிரங்கமாக அரசியல் பேசுவதை நிறுத்த வேண்டும். ஏனெனில், அவர் ஒரு முன்னாள் அரசியல்வாதி. இந்நாள் அரச அதிகாரி என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் வேண்டுகோளும், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கையும் தமிழ் மக்களுக்கு மயானபூமி வேண்டும் என்பதைப் போன்றதேயாகும் என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் குறிப்பிட்டிருந்தார். ரெஜினோல்ட் குரேயின் குறித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே, மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மனோ கணேசன் தெரிவித்துள்ளதாவது, "மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண சபைக்கும் இடையிலான பாலமாக ஆளுநர் செயற்பட வேண்டும். அதற்கு வடக்கு ஆளுநர் அமைதியாக செயற்பட வேண்டும். அவரும் அவரது பழைய அரசியல்வாதி நினைப்பில் ஏட்டிக்குப் போட்டியாக கருத்துகளைக் கூற இப்போது தொடங்கிவிட்டார். இப்படிக் கருத்துக் கூறுவதில் அவர் ஒருவித இன்பமடைகின்றார் எனத் தெரிகின்றது.

ரெஜினோல்ட் குரே பிழையான ஒரு மனிதர் அல்லர். விசயம் தெரியாதவரும் அல்லர். ஆனால், அவருக்கு இது புரியாமல் போனது ஆச்சரியமே. அவர் வடக்கு மாகாணத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்டதும், தேசிய சகவாழ்வு அமைச்சர் என்ற முறையில், நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவர் கருத்துக் கூறக்கூடாது என்பது அல்ல.

ஆனால், அடிக்கடி சர்ச்சைக்குரிய விவகாரங்களை அவர் இப்போது தொடர்ந்து கதைத்து வருகின்றார். எனவே இந்த அரசியல் மேடை பேச்சுகளை நிறுத்திவிட்டு, ஒருகாலத்தில் வடக்கில் ஆளுநராக இருந்த லயனல் பெர்ணான்டோவின் பாணியை அவர் பின்பற்ற வேண்டும். அது என்னவோ நாட்டின் ஏனைய மாகாண ஆளுநர்கள் இருக்கின்றார்களா, இல்லையா என்றே தெரிவதில்லை. ஆனால், வடக்கு மாகாணத்துக்கு வந்து விட்டால் எல்லோர் நிலைமைகளும் மாறிவிடுகின்றன.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கு மாகாண ஆளுநர் பகிரங்கமாக அரசியல் பேசுவதை நிறுத்த வேண்டும்: மனோ கணேசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com