Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தனித் தமிழீழ நிலைப்பாட்டிலிருந்து தாம் நகர்ந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தனித் தமிழீழமே தமிழ் மக்களுக்கு இறுதித் தீர்வாக அமைய முடியும் எனும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நேற்றோடு (மே 14) 40 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜேனில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற கும்பமேளா விழாவில் கலந்து கொண்டிருந்த இரா.சம்பந்தன், அங்கு வைத்து ‘தி ஹிந்து’ பத்திரிகைக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உட்பட பெரும்பாலான தமிழ்க் கட்சிகள் பிரிக்கப்படாத இலங்கைக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்ற இணக்கப்பட்டிற்கு வந்துள்ளதாகவும், தமிழ் மக்களின் தன்னாட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to தனித் தமிழீழ நிலைப்பாட்டிலிருந்து விலகி விட்டோம்: சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com