கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளதாக அந்தக் கட்சியின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.
இதன்போது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பல மாதங்களாகக் கூட்டப்படவில்லை. இதனை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எவ். கோரியது. இதனையடுத்தே, ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினை நடத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

0 Responses to கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வரும் 25ஆம் திகதி கொழும்பில்!