Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இராணுவம் உள்ளிட்ட முப்படையினரின் மனநிலையில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2015 ஜனவரி மாதம் முதல் இடம்பெற்றுள்ள பல சம்பவங்களே முப்படையினரின் மனோநிலையை பாதித்துள்ளதாகவும், அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2002 யுத்தநிறுத்த காலத்தில் கூட முப்படையினரின் மனநிலையில் இவ்வாறான பாதிப்பு காணப்படவில்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கொஸ்கம- சலாவ இராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியம் வெடிப்பு குறித்த விசாரணைகளின்போது படையினர் மத்தியில் தற்போது காணப்படும் மனோநிலை குறித்து ஆராயவேண்டும். குறிப்பிட்ட வெடிவிபத்துக்குக் காரணமான தீ ஏன் ஏற்பட்டது என்பதற்கான காரணம் இதுவரையில் தெரியவராதபோதிலும் படையினரின் மனோநிலையில் பாதிப்பு ஏற்படும்போது அவர்களின் சுயகௌரவத்துக்குப் பாதிப்பு ஏற்படும்போது கண்காணிப்பு, மேற்பார்வை, தலைமைத்துவம் ஆகிய அனைத்தும் பாதிக்கப்படும்.” என்றுள்ளார்.

0 Responses to முப்படையினரின் மனநிலையில் பாதிப்பு; விசாரணை கோருகின்றார் மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com