Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள விடயத்தில் புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தாகும் வரையில் 2500 ரூபாய் இடைக்கால நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று வியாழக்கிழமை அலரி மாளிகையில் பொருளாதார முகாமை குழு கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.

இதன்போது, பெருந்தோட்ட தொழிற்சங்க சம்மேளனத்தின் சார்பாக தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வி.இராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள் ஜோன் செனவிரத்ன, ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்கிரம, நவீன் திசாநாயக்க மற்றும் திறைசேரி ஆலோசகர் பாஸ்கரலிங்கம் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு,

1. 2016 ஏப்ரல் முதல் கணக்கெடுக்கப்பட்டு ரூ. 2500 இடைக்கால நிவாரண கொடுப்பனவு தோட்ட தொழிலாளருக்கு, புதிய கூட்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் வரை வழங்கப்படும். புதிய கூட்டு ஒப்பந்த கணக்கெடுப்பு 2015 மார்ச் 31ஆம் திகதியில் இருந்து நிலுவையுடன் ஆரம்பிக்கப்படும்.

2. இதன் மூலம் தோட்ட தொழிலாளருக்கான இன்றைய நாட் சம்பளம் ரூ. 620 உடன் ரூ. 100 மேலதிகமாக சேர்க்கப்பட்டு ரூ.720 வழங்கப்படும்.

3. இந்த மேலதிக தொகையை வழங்க, தோட்ட முகாமைத்துவ நிறுவனங்களுக்கு, அரச வங்கிகள் மூலம் கடன் வசதி செய்து கொடுக்கப்படும். இந்த பொறுப்பு திறைசேரி ஆலோசகர் பாஸ்கரலிங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

4. வெகு விரைவில் கூட்டு ஒப்பந்த பேச்சுவார்தைகள் ஆரம்பிக்கப்பட்டு, புதிய தொகை சம்பளமும், 2015 மார்ச் 31ஆம் திகதியிலிருந்து கணக்கெடுக்கப்பட்டு நிலுவை சம்பளமும் வழங்கப்படும்.

5. கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களின் பேச்சுவார்த்தை நடவடிக்கையை நேரடியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்நடத்துவார்.

6. விரைவில் தொழிலாளருக்கு பயிர் காணிகள் பிரித்து வழங்கும் புதிய தொழில் முறைமையான, வெளி ஒப்பந்த முறைமை பற்றிய பேச்சுவார்த்தைகள் அரசாங்கத்துக்கும், அனைத்து தொழிற்சங்கங்களுக்கும், தோட்ட முகாமை நிறுவனங்களுக்கும் இடையில் ஆரம்பிக்கப்படும்.

0 Responses to புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தாகும் வரையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 2500 ரூபாய் இடைக்கால நிவாரணம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com