ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசு வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அடுத்த கட்டத்துக்கு நகர முடியாது என்று மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தின் பணிப்பாளரும், நல்லிணக்கம் தொடர்பான விசேட செயலணியின் செயலாளருமான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 13ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில், இலங்கை வழங்கியுள்ள வாக்குறுதிகளின் நிலை என்ன என்பது தொடர்பில் பாக்கியசோதி சரவணமுத்து கருத்து வெளியிட்டுள்ளார். அதிலேயே, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, "எதிர்வரும் 29ஆம் திகதி இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையில் அல் ஹுசைன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளார். அத்தோடு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் உள்ளகப் பொறிமுறை தொடர்பில் இலங்லை அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றவுள்ளார்.
காணாமற்போனோர் தொடர்பான பணியகத்தை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றியமைக்கும் செயற்பாடும் நடைபெறுகின்றது. ஏனைய விடயங்கள் தொடர்பில் பேச்சுகள் மாத்திரமே நடைபெற்றுள்ளன.
ஐக்கிய நாடுகளில் இலங்கை அரசு கொடுத்துள்ள வாக்குறுதிகளை ஒருபோதும் நிறைவேற்றாது முன்னோக்கி நகர முடியாது. இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட அந்தத் தீர்மானத்தில் உள்ள அனைத்து விடயங்களையும் அரசு நிறைவேற்றியே ஆகவேண்டும்.
பலர் இது தொடர்பில் மாறுப்பட்ட கருத்துகளைக் கூறலாம். ஆனால், அது சாத்தியப்படக் கூடிய விடயம் அல்ல. சர்வதேச நாடுகள் இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கே ஆதரவு வழங்கி வருகின்றன. எனவே, மனித உரிமை விவகாரத்தில் இலங்கை ஆக்கபூர்வமான நகர்களை நோக்கிப் பயணிப்பது கட்டாயமாகும். மாறாக அதனை நிராகரித்துச் செயற்பட முடியாது.” என்றுள்ளார்.

0 Responses to ஐ.நா.வில் வழங்கிய வாக்குறுதிகளை மீறிவிட்டு இலங்கை அரசு முன்னோக்கி செல்ல முடியாது: பாக்கியசோதி சரவணமுத்து