குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வருமானத்தில் 35% வீதமானவை மதுபானம் மற்றும் புகைத்தல் என்பவற்றிற்கு செலவிடப்படுவதுடன், இது நாட்டில் வறுமை நிலை அதிகரிப்பதற்கும் மக்களின் சுகாதாரம் குன்றுவதற்கும் முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மதுசார மற்றும் புகைத்தலுக்கு எதிரான வேலைத்திட்டத்தின்போது அரசு மிகத் தெளிவானதும் நேரடியானதுமான தீர்மானங்களை மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் புகைத்தலுக்கு எதிராக நாம் முன்னெடுத்த போராட்டத்தின் விளைவாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்நாட்டில் புகை பிடிக்கும் ஆண்களின் தொகை சுமார் 5% வீதத்தினால் குறைவடைந்துள்ளதாகவும், இந்நிலைமையை மேலும் விருத்தி செய்வதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தக துறையின் தந்திரோபாயங்கள் மற்றும் மக்களை கவரும் விதமான விளம்பரங்களினால் எமது இளைஞர் சமுதாயம் வழி தவறி செல்வதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இவற்றை தோற்கடிப்பதற்காக கைகோர்ப்பது அனைவரதும் பொறுப்பாகும் என்று வலியுறுத்தியுள்ளார்.
எமது நாட்டின் பெயரை உள்ளடக்கியதாக இலங்கை புகையிலை கம்பனி செயற்பட்டபோதிலும், எமது நாடு இதன் பங்காளராக செயற்படவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவிதமான வருமான வழிகளுடனும் அரசு பணியாற்றமாட்டது என்று தெரிவித்துள்ளார்.
அன்று சிகரெட் பக்கட்டில் சுகாதார எச்சரிக்கையை 80% வீதமாக மாற்றுவதற்காக வர்த்தமானி அறிக்கை வெளியிடப்பட்டதன் காரணமாக அலரி மாளிகையில் கதிரைகளில் அமர்ந்திருந்த புகையிலை கம்பனிகளின் பணிப்பாளர்கள் முன்னிலையில் விளக்கமளிப்பதற்கு நேர்ந்த வரலாற்றை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இதனை நாட்டு மக்கள் அவதானத்துடன் நோக்கியதன் காரணமாக இந்த நாட்டின் தாம் ஜனாதிபதியாக பதவி வகிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to குடும்ப வருமானத்தில் 35 வீதமானவை மது, புகைத்தலுக்காக செலவிடப்படுகின்றன; ஜனாதிபதி ஆதங்கம்!