கொழும்பு, அவிசாவளைக்கு அண்மித்த கொஸ்கம - சலாவ பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமொன்றின் ஆயுதக் கிடங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்து, இன்று திங்கட்கிழமை அதிகாலை 01.30 மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை இராணுவ முகாமைச் சுழவுள்ள 6 கிலோ மீற்றருக்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட பொது மக்கள், அவர்களது வீடுகளுக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், இராணுவ முகாமைச் சுற்றியுள்ள ஒரு கிலோமீற்றர் பகுதி பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தீ விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பொதுமக்கள் உட்பட 47 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, இவ்வாறான பாரியதொரு அனர்த்தம் யுத்த காலப்பகுதியில் பதிவாகியிருக்குமானால் இலங்கை இராணுவம் பின்னடைவைச் சந்தித்திருக்க நேரிட்டிருக்கும் என இராணுவம் தெரிவித்துள்ளது.
குறித்த ஆயுதக் களஞ்சியசாலையில் இடம்பெற்ற தீயின் முழுமையான சேத விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆயுதக் களஞ்சியப் பகுதிக்குள் சென்ற பின்னரே இழப்புக்கள் குறித்த உண்மைத் தகவல்களை மதிப்பிட முடியும் எனவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

0 Responses to கொஸ்கம- சலாவ இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுக்குள்; ஒருவர் பலி, 47 பேர் காயம்!