Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாடெங்கிலும் இடம்பெற்றுள்ள சூழல் அழிவுகளுக்கு மத்தியில் சூழல் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்படும் தீர்மானங்களை எவரும் சவாலுக்குட்படுத்த முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத வர்த்தகங்களை மேற்கொண்டு சூழலுக்கு சேதங்கள் விளைவிக்கப்படுமானால், அவற்றைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டியது சகல அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச சூழல் தினத்தை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாத்தளை எட்வட் மைதானத்தில் நடைபெற்ற சர்வதேச சூழல் தின தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைக் கூறியுள்ளார்.

நாடெங்கிலும் இடம்பெறும் சூழல் அழிவுகளைத் தடுத்து சூழலைப் பாதுகாப்பதற்கு புதிதாக சிந்தித்து புதிய நிகழ்ச்சித் திட்டங்களின் படி செயற்படுமாறும் குறித்த அமைச்சர்கள், அரசாங்க அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, சூழல் தொடர்பான பொறுப்புக்களை நிறைவேற்றுகையில் எப்போதும் எச்சரிக்கையை பார்க்கிலும் முன்மாதிரி மேலானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு தசாப்தங்களாக நாட்டில் இடம்பெற்ற சூழல் அழிவுகள் தொடர்பான பொறுப்பில் ஒரு பகுதியை எமது அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இப்படியான நிலைமைகளைத் தவிர்ப்பதற்கு சட்டம், அதிகாரம் மற்றும் பொறுப்புக்கள் இருந்தும் அதனை நிறைவேற்றாததன் பெறுபேறுகளை இன்று முழு நாடும் அனுபவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சூழலைப் பாதுகாப்பதற்கு ஊடக நிறுவனங்கள் வழங்கும் பங்களிப்புகளும் போதுமானதாக இல்லை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதுதொடர்பாக குரல் எழுப்புவதற்கு தேசிய செய்திப் பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டியது யுகத்தின் தேவையாகும் என்றும் கூறியுள்ளார்.

0 Responses to சூழல் பாதுகாப்புத் தொடர்பிலான தீர்மானங்களை யாரும் மீற முடியாது: ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com