புதிய அரசியலமைப்பினூடு கிடைக்கும் தீர்வு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும், போராட்டங்களுக்கும் நியாயமான தீர்வினை முன்வைப்பதாக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை அலுவலகம் திறக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தி நேற்று ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இரா.சம்பந்தன் கூறியுள்ளதாவது, “அரசியல் ரீதியாக இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் சார்பிலும் தமிழ் பேசும் மக்கள் சார்பிலும் ஒரு கொள்கையை வளர்த்துவருகின்றது. நாங்கள் ஓர் இனம். தனித்துவமான இனம். ஒரு தனித் தேசிய இனம். நாங்கள் இந்த நாட்டில் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வடக்கு, கிழக்கில் சரித்திர ரீதியாக வாழ்ந்துவந்துள்ளோம். வாழ்ந்துகொண்டு வருகின்றோம்.
அதனடிப்படையில் எமக்குச் சுயநிர்ணய உரிமைக்கு உரித்து உண்டு. அது அங்கீகரிக்கப்பட வேண்டும். இந்த அம்சங்களை உள்ளடக்குகின்ற ஓர் அரசியல் தீர்வு, ஓர் அரசமைப்பு இந்த நாட்டில் உருவாக்கப்படவேண்டும். இது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தந்தை செல்வாவினுடைய கொள்கையாக நீண்டகாலம் இருந்துவருகின்றது. அதை நாங்கள் எல்லோரும் அறிவோம். இந்த அடிப்படையில்தான் எமது மக்கள் தேர்தல்கள் வரும்போது வாக்களிக்கின்றனர்.
ஜனநாயக ரீதியாக அவர்கள் தங்களது வாக்குரிமையை இதற்காகத்தான் பயன்படுத்துகின்றார்கள். தற்போது வடக்கு, கிழக்கிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மக்கள் தங்களுடைய பிரதிநிதிகளில் ஏறத்தாழ 85 வீதமானவர்களை ஒரு குறிப்பிட்ட கொள்கையின் அடிப்படையில் தெரிவுசெய்திருந்தால் அதனுடைய விளக்கம் என்ன?
நாம் இன்று ஒருமித்த ஒரு நாட்டினுள், நாட்டுக்கு எவ்விதமான ஆபத்தும் ஏற்படாமல், நாம் பாதுகாப்பாக வாழக்கூடிய எமது நிலம் பாதுகாப்பாக இருக்கக்கூடிய எமது நியாயபூர்வமான அபிலாஷைகள் பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக, கலாசார ரீதியாக, அரசியல் ரீதியாக இவற்றை நாங்கள் நிறைவேற்றிப் பகிர்ந்தளிக்கப்பட்ட இறைமையின் அடிப்படையில் நாங்களும் பங்காளிகளாக அந்த இறைமையின் அதிகாரங்களை நாங்களும் பயன்படுத்தக்கூடிய ஒரு முறையிலான அரசியல் தீர்வு ஏற்படவேண்டும் என்று கேட்கின்றோம்.
இதைத்தான் நாங்கள் சென்ற பாராளுமன்றத் தேர்தலில் மக்களுக்கு முன்னால் வைத்தோம். அந்த நிலைப்பாட்டுக்கு கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 85 வீதமான தமிழ் மக்கள் வாக்களித்துள்ளார்கள். இதை எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும். தமிழ் மக்களுக்குத் திருப்தியளிக்கக்கூடிய ஓர் அரசியல் தீர்வு ஏற்படுவதாக இருந்தால் மக்களுடைய வாக்களிப்பின் அடிப்படையில் மக்களுடைய ஜனநாயக உரிமையை பிரயோகித்து மக்கள் வழங்கிய தீர்வின் அடிப்படையில் ஓர் அரசியல் தீர்வு வரவேண்டியது அத்தியாவசியமானது.
நாங்கள் இந்த நாட்டில் தற்போது ஒரு முக்கியமான நேரத்தில் வாழ்ந்து வருகின்றோம். ஓர் அரசியல் தீர்வு எமக்கு மாத்திரம் தேவை அல்ல. நாட்டில் வாழ்கின்ற எல்லோருக்கும் தேவையான ஒரு விடயம். இந்த நாட்டுக்குத் தேவையான விடயம். ஆகையால் அவ்விதமான ஓர் அரசியல் தீர்வு ஏற்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இந்தத் தீர்வுக்காக நாங்கள் மிகவும் விசுவாசமாக உழைப்போம். ஆனால், அந்தத் தீர்வு எமது மக்களுடைய பிரச்சினைகளுக்கு அவர்களுடைய போராட்டங்களுக்கு நியாயமான நிரந்தரமான தீர்வாக அமையவேண்டும். அவ்வாறு அமையாதுவிட்டால் அது ஒரு தீர்வாக அமைய முடியாது. இதை எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to புதிய அரசியலமைப்பினூடு கிடைக்கும் தீர்வு தமிழ் மக்களின் போராட்டங்களுக்கு நியாயம் சேர்க்க வேண்டும்: சம்பந்தன்