Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொதுமக்கள் வசிப்பிடங்களுக்கு அருகாமையிலுள்ள இராணுவ ஆயுதக் களஞ்சியங்களை உடனடியாக அகற்றி பாதுகாப்பினை உறுப்படுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கோரிக்கை விடுத்துள்ளது.

தீ விபத்துக்குள்ளான கொஸ்கம- சலாவை இராணுவ முகாமையும், அந்த ஆயுத களஞ்சியத்தையும் அங்கிருந்து அகற்றுமாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதேசவாசிகளால் கோரிக்கை முன்வைப்பட்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சலாவ இராணுவ முகாமைச் சுற்றியுள்ள பிரதேசம், பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் வசிக்கும் கிராமம், அரச வைத்தியசாலை மற்றும் பெருமளவான பொதுமக்கள் வசிக்கும் இடம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to பொதுமக்களின் வசிப்பிடங்களுக்கு அருகாமையிலுள்ள ஆயுதக் களஞ்சியங்களை அகற்றவும்: ஜே.வி.பி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com