எதிர்ப்புக்களை சமாளித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமை சந்திப்பேன் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் வடக்கு மாகாண முதலமைச்சரை பொருத்தமான நேரத்தில் சந்திப்பதாக அறிவித்துள்ளமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதாவது, “நாம் இருவரும் சந்திப்பதற்கு பலர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமை சந்திப்பதாக இருந்தால் டெல்லியில் அனுமதியினைப் பெற்றே சந்திக்க முடியும். இல்லாவிட்டால், அது சட்டத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துள்ளார்கள்.
தமிழக முதலமைச்சரை சந்திப்பதற்கான நாள் இதுவரையில் கிடைக்கவில்லை. கிடைத்தால் நிச்சயம் சந்திப்பேன். இந்த எதிர்ப்புக்களை எல்லாம் சமாளித்து விட்டு சில நாட்களின் பின்னர் சென்று சந்தித்துப் பார்ப்போம்.” என்றுள்ளார்.

0 Responses to எதிர்ப்புக்களை சமாளித்து முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திப்பேன்: விக்னேஸ்வரன்