கொழும்பு, அவிசாவளைக்கு அண்மித்த கொஸ்கம - சலாவ பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணியளவில் ஏற்பட்ட வெடிப்புக் காரணமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.
சலாவ இராணுவ முகாமில் வெடி பொருட்கள் அடங்கிய கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இந்த தீ பரவியுள்ளதாக சந்தேகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக இராணுவ முகாமைச் சூழவுள்ள 6 கிலோ மீற்றர் சுற்றளவுக்கு பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதேவேளை, தீயுடன் பெரும் வெடிப்பு சத்தமும் கேட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளில் முப்படையும் ஈடுபட்டுள்ளது. இந்த தீ விபத்தின் சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
இதனிடையே, அவிசாவளைப் பகுதி பாடசாலைகள் உள்ளிட்ட அரச- தனியார் நிறுவனங்களுக்கு நாளை திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

0 Responses to கொஸ்கம- சலாவ இராணுவ ஆயுதக் கிடங்கில் தீ விபத்து; பிரதேச மக்கள் முற்றாக வெளியேற்றம்!