ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவர் (அதாவது, இரண்டாம் தலைவர்) பதவி தனக்கு வழங்கப்படுவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றனவா, இல்லையா என்பது தொடர்பில் எதுவும் தெரியாது என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளரை சுதந்திரக் கட்சியின் இரண்டாவது தலைவராக நியமிக்க பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளதாக கொலன்னாவில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்கட்சி சங்கங்கள் அமைச்சர் டப்ளியூ.டீ.ஜே.செனவிரத்ன குறிப்பிட்டிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்துள்ள கோத்தபாய ராஜபக்ஷ, இரண்டாம் தலைவர் பதவி தொடர்பில் தனக்கு எந்தவித அறிக்கையும் கிடைக்கவில்லை என்றுள்ளார்.

0 Responses to சுதந்திரக் கட்சியின் இரண்டாம் தலைவர் பதவி தொடர்பில் எதுவும் தெரியாது: கோத்தபாய