Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை அரசாங்கம் நடைமுறைப்படுத்தினால், நாடு பாரிய பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டியேற்படும் என்று கூட்டு எதிரணியின் (மஹிந்த ஆதரவு அணி) முக்கியஸ்தரான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடனேயே கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை அரசாங்கம் அதனை நிராகரிப்பதாக இருந்தால் தற்போது அது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற முனைந்தால் நாடு பாரதூரமான பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். இதில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடங்களை அரசாங்கம் நிராகரிக்காது செயற்படுத்த முயற்சித்தால் அதற்கு எதிராக நாங்கள் குரல் கொடுப்போம்.” என்றுள்ளார்.

0 Responses to ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் நாடு பெரும் பின்னடைவைச் சந்திக்கும்: தினேஷ் குணவர்த்தன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com