தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜெயலலிதா தலைமையில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அதிமுக அரசு, இன்று 100வது நாளில் அடி எடுத்து வைக்கிறது. நாட்டிலேயே பெண் முதல்வர்களில் அதிக ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவராக இருந்தவர் டெல்லியின் ஷூலா தீட்சீத்.
அவரது சாதனையை ஆகஸ்ட் 28ம் தேதி முதல்வர் ஜெயலலிதா முறியடித்துள்ளார். இனி நாட்டிலேயே அதிக நாட்கள் முதல்வராக இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதாதான். இந்நிலையில்தான் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அதிமுக இன்று 100 வது நாளில் அடி எடுத்து வைத்துள்ளது.
சட்டப்பேரவை வாயிலில் குலைத் தள்ளும் வாழை மரங்கள், வண்ண வண்ண மலர்கள் என்று கண் கண்கொள்ளாக் காட்சியாக சட்டப்பேரவை காட்சி அளிக்கிறது. வரலாற்று சாதனை செய்த முதல்வர் என்று சட்டப்பேரவையில் முதல்வரை வாழ்த்தி அதிமுக உறுப்பினர்கள் ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.

0 Responses to அதிமுக அரசு இன்று 100 வது நாளில் அடி எடுத்து வைக்கிறது..