Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த ஆட்சிக் காலத்தில், அரசுக்கு 1,140 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் மீது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2012.08.07 தொடக்கம் 2015.01.08 காலப் பகுதியில் அவன்காட் மெரிடைம் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்ட பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் காரணமாக, அரசுக்கு 1,140 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தே குறித்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் சுஜாதா தமயந்தி ஜயரத்ன, அவன்காட் நிறுவனத் தலைவரான ஓய்வு பெற்ற இராணுவ கேணல் நிஸ்ஸங்க சேனாதிபதி, பாலித பியசிறி பெனாண்டோ, கருணாரத்ன, பி.ஏ. கொடகவெல, சோமதிலக திஸாநாயக்க, நிஸ்ஸங்க யாபா சேனாதிபதி, ஜயநாத் கொலம்பகே, ஜயரத்ன பெரேரா உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

0 Responses to அரசுக்கு 1140 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டி கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக வழக்கு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com