Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு இன்று புதன்கிழமை வரும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. 

ஏற்கனவே விடுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயைச் சந்திப்பதற்கு பான் கீ மூன் நேரம் ஒதுக்கிய போதிலும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கியிருக்கவில்லை. அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடனேயே பான் கீ மூனை சந்திக்கும் சூழல் உருவாகியிருந்தது.

இந்த நிலையிலேயே, சி.வி.விக்னேஸ்வரனுடனான நேரடியான சந்திப்பு தொடர்பில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

0 Responses to பான் கீ மூன் சி.வி.விக்னேஸ்வரனையும் சந்திப்பாராம்; ஐ.நா. அலுவலகம் உறுதி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com