Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்பகமான- பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்வது அவசியமானது. அதுவே, இலங்கையின் எதிர்காலத்துக்கும் நல்லது என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கான விஜயத்தினை எதிர்வரும் 31ஆம் திகதி மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே பான் கீ மூன், ஆங்கில ஊடகமொன்றிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பான் கீ மூன் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையில் பொறுப்புக்கூறல்கள் காணப்படவேண்டும் என்ற ஐக்கிய நாடுகளின் கோரிக்கைகள் தனித்துவமானவையல்ல. சர்வதேச குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்பது ஐக்கிய நாடுகளின் முக்கியமான நிகழ்ச்சி நிரல். சர்வதேச மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான சட்டமீறல்கள் இடம்பெற்ற பிராந்தியங்கள், மற்றும் நாடுகளில் நாங்கள் இந்த வேண்டுகோளை விடுப்போம்.” என்றுள்ளார்.

0 Responses to மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணைகள் அவசியம்; அதுவே இலங்கைக்கு நல்லது: பான் கீ மூன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com