Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அதிகாரங்களைப் பகிரும் போதும்; நாடு பிளவுபடாது என்பதை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பு சீர்திருத்தமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்கிற வகையில் நாடு பிளவுபடுவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

 அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டில் நீடித்து வந்த யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்பு எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படாமல் இருக்க நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  அனைவரும் ஒற்றுமையாக நல்லிணக்கத்தோடும் புரிந்துணர்வோடும் செயலாற்ற வேண்டியது அவசியமானது.

எதிர்காலத்தில் விவசாயம், கைத்தொழில் மற்றும் கல்வி உட்பட அனைத்து துறைகளிலும் அபிவிருத்தி ஏற்படும் என்று எதிர்பார்க்கின்றேன்.

யுத்தம் முடிவடைந்ததனால் இப்போது மீதமிருப்பது அபிவிருத்தி நடவடிக்கைகள் மட்டுமே. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்கிற வகையில் நாடு பிளவுபடுவதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. அதனை உறுதிமொழியாகவே வழங்குகின்றேன்.

முப்படைகள், நிதி முகாமைத்துவ செயற்பாடுகள் மற்றும் குடிவரவு, குடியகல்வு நடவடிக்கைகளும் மத்திய அரசாங்கத்தின் கீழ் செயற்பட வேண்டும். அதுபோல, மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகள் மாகாண நிர்வாகத்தின் மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன இணைந்து இந்த வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதனால், அடுத்து வரும் பத்து வருட காலத்திற்குள் இலங்கையை சிங்கபூர் போன்ற நாடாக மாற்ற முடியும்.” என்றுள்ளார்.

0 Responses to அதிகாரங்களைப் பகிரும் போதும்; நாடு பிளவுபடாது: சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com