Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு - கிழக்கு மக்களுக்கு நீதி வழங்குவதிலிருந்து விலகிச் செல்லும் இலங்கை அரசாங்கம், நேர்மையற்று செயற்படுதில் கவனமாக இருப்பதாக காணாமற்போனோரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

சர்வதேச காணாமற்போனோர் தினமான இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 30) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை காணாமற்போனோரின் உறவினர்களும், பொது அமைப்புக்களும் இணைந்து நடத்தின. இதன்போதே, மேற்கண்ட குற்றச்சாட்டுக்களை போராட்டக்காரர்கள் முன்வைத்தனர்.

போராட்டத்தின் முடிவில் தேசிய நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பிலான கலந்தாலோனைகள் செயலணிக்கு மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.

அந்த மகஜரில், “நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பிலான கலந்தாலோனைகள் செயலணியால் 2016 ஆகஸ்ட் சமர்பித்துள்ள இடைக்கால அறிக்கையில், பாதிக்கப்பட்டோரின் குரலையும் உள்ளடக்கி அவர்களின் கோரிக்கைகளையும் உரிய முறையில் கவனத்தில் எடுத்து வெளிவந்துள்ளது. எமது துயரங்கள், இழப்புகள், மறுக்கப்பட்டுள்ள உரிமைகள், தொடர்ந்தும் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் என்பவற்றை உலகுக்கு எடுத்துரைக்கும் ஒரு சர்வதேச நியாயப் பத்திரிகையாகவே இவ் அறிக்கையை நாம் பார்க்கின்றோம்.

இன்றைய இலங்கை அரசானது இயலாமையிலும், நல்லிணக்கம சார்ந்து நேர்மையான எண்ணப்பாடும் இல்லாமலும் இருப்பதாகவே காண்கின்றோம். எனவே வடக்கு - கிழக்கு மக்களுக்கு நீதியை வழங்கவோ, சமாதானமான வாழ்வை உருவாக்கவோ இயலாத நிலையில் இலங்கை அரசு உள்ளது. எனவே, காணாமற்போனோர் தொடர்பில் சர்வதேச தலையீட்டுடன் கூடிய நீதி அவசியம்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

0 Responses to இலங்கை அரசாங்கம் நேர்மையற்று செயற்படுகின்றது; காணாமற்போனோரின் உறவினர்கள் குற்றச்சாட்டு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com