Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகள் எதிர்காலத்தில் விடுவிக்கப்பட மாட்டாது என்று தான் கூறவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிப்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “வலிகாமம் வடக்கில் இன்னமும் உயர்பாதுகாப்பு வலயமாகச் சுமார் 4,400 ஏக்கர் காணிகள் உள்ளன. அவற்றில் 460 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், விடுவிக்கப்படும் காணிகளைத் தவிர்த்து மிகுதிக் காணிகளை இராணுவத்தினர் தொடர்ந்தும் வைத்திருக்கப் போவதாகவும், அதற்காக நியாயமான நஷ்டஈட்டை, முகாம்களில் தங்கியுள்ள மக்கள் பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறப்பட்ட கடிதத்துடன் கூடிய விண்ணப்படிவங்கள், யாழ்ப்பாணத்திலுள்ள முகாம் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

இதனை அறிந்த நான், இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். அவ்வாறான அறிவித்தல் எதனையும் தான் கொடுக்கவில்லையென பிரதமர் கூறினார்.

தொடர்ந்து, மீள்குடியேற்ற அமைச்சருக்கு இந்த விடயம் தெரியப்படுத்தப்பட்டு, அவர் இந்த விடயத்தை ஜனாதிபதிக்கு கூறியுள்ளார். ஜனாதிபதி தான் அவ்வாறு அறிவித்தல் கொடுக்கவில்லயென்பதைக் கூறியுள்ளதுடன், யார் இவ்வாறான அறிவித்தலைக் கொடுத்தனர் என்பது தொடர்பில் ஆராயுமாறும் கூறியுள்ளார். பாதுகாப்புச் செயலாளரிடமும் இந்த விடயம் தொடர்பில் வினவுவதாகக் கூறியுள்ளார்.” என்றுள்ளார்.

வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயமாகவிருக்கும் காணிகள் தொடர்பில் நீதிமன்றங்களில் 2,176 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், நஷ்டஈடு வழங்குதல் தொடர்பான அறிவித்தல்களை விடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to வலி வடக்கில் இராணுவத்தின் பிடியிலுள்ள மீதமுள்ள காணிகள் விடுவிக்கப்படாது என ஜனாதிபதி கூறவில்லை: மாவை சேனாதிராஜா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com