Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உத்திர பிரதேசத்தில் உள்ள லாலா லஜபதி ராய் அரசு மருத்துவமனையில், ஸ்ட்ரெச்சர் வழங்காததால் சிறுவன் ஒருவன் தந்தையின்  தோளில் மரணம் அடைந்துள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கடந்த வாரம் ஒடிசாவில் உள்ள அரசு மருத்துவமனையில், இறந்து போன மனைவிக்கு ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால், அவர் 10 கிலோ மீட்டர் தூரம்  தமது மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற அவல  நிலை அனைவரியும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் இன்று உத்திர பிரதேசத்தில் உள்ள அரசு  மருத்துவமனைக்கு கடும் ஜுரத்தால் அவதிப்பட்ட தமது மகனை தந்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். 

மருத்துவ மனையில் சிறுவனைக் கொண்டு செல்ல அவசர கால ஸ்ட்ரெச்சர் எதுவும் வழங்கப்படாத நிலையில், சிறுவனை அவனது தந்தை தமது தோளில் சுமந்துக்கொண்டு 250 மீட்டர் தூரம் ஓடியுள்ளார். இருப்பினும் சிறுவன் சிகிச்சைக்கும் முன்பே தமது தந்தையின் தோளில் கடும் ஜுரத்தால் உயிரிழந்துள்ளான் இது நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மட்டுமல்லாமல், அரசு மருத்துவ மனைகளின் மெத்தனத்தையும் காட்டி உள்ளதாக சமுக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

0 Responses to உத்திர பிரதேச மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் வழங்காததால் சிறுவன் தந்தையின் தோளில் மரணம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com