15ம் திகதி வரை என்று இருந்ததை நீட்டித்து வருகிற 20ம் திகதி வரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
கடந்த வாரம் கர்நாடக அரசு வருகிற 15ம் திகதி வரை தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவுப் பிறப்பித்து இருந்தது. இதையடுத்து கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டாலும், இனி திறந்துவிட முடியாது என்று ஒரு மனுவை உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மத்திய அரசிடம் கடிதம் மூலம் முறையிட்டது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சட்டத்தை கையில் எடுக்க மத்திய அரசுக்கு என்ன உரிமை உள்ளது என்றும் கேள்வி எழுப்பினர். மேலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசும், மக்களும் மதிக்க வேண்டும் என்றும், சட்டத்தை யார் வேண்டுமானாலும் கையில் எடுத்துக்கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர். மேலும், வருகிற 20ம் திகதி வரை கர்நாடக அரசு, தமிழகத்துக்கு காவிரியில் தினமும் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று புதிய உத்தரவையும் பிறப்பித்து உள்ளனர்.

0 Responses to எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட உத்தரவு!