ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடுகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் பங்கெடுப்பதால், சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளதாவது, “தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். அதேபோல, ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதன் காரணமாக சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி என்று இரண்டு கட்சிகள் இருப்பதில் எந்த பயனும் இல்லை. இரு கட்சிகளையும் கலைத்து விட்டு தனி கட்சியொன்று உருவாக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. சுதந்திரக் கட்சியின் உண்மையான ஆதரவாளர்களுக்கு தலைமைத்துவம் வழங்க எனது குழு தயாராகவுள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to ஐ.தே.க மாநாடுகளில் சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் பங்கெடுப்பதால் ஆதரவாளர்கள் அதிருப்தி: மஹிந்த