உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி எதிர்வரும் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்க கூட்டு எதிரணி (மஹிந்த அணி) திட்டமிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் அண்மையில் கூட்டு எதிரணியின் முக்கியஸ்தர்கள் நடத்திய சந்திப்பின் போது இந்த போராட்டம் பற்றி ஆராயப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தல், மக்களை நேரடியாக தெளிவுபடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.
இந்தப் போராட்டங்களில் கூட்டு எதிரணியைப் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து கொள்ள உள்ளதாக அறியவருகிறது.
அரசாங்கம் தொடர்ந்தும் உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைத்து வருவதாகவும் இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்த போதும், அதனை ஒத்திவைத்து வருவதாகவும் கூட்டு எதிரணி குற்றஞ்சாட்டியுள்ளது.

0 Responses to உள்ளூராட்சித் தேர்தலை நடத்தக் கோரி கூட்டு எதிரணி எதிர்வரும் 20ஆம் திகதி போராட்டம்!