சென்னை காமராஜர் சாலையில் முதல்வர் செல்லும் பாதையில் நின்ற போக்குவரத்து பெண் காவலர் மீது கல்லூரி மாணவர் மோட்டார் சைக்கிளில் மோதியதில் படுகாயமடைந்த பெண் காவலர் கைகால்களில் எலும்பு முறிவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் முதல்வர் போயஸ் தோட்டத்திலிருந்து கோட்டைக்கு ராதாகிருஷ்ணன் சாலை வழியாக கடற்காரை காமராசர் சாலை வழியாக தலைமை செயலகத்துக்கு
செல்வார். அப்போது கடற்கரை சாலையின் ஒரு பக்கத்தில் பொதுமக்கள் வாகனங்கள் செல்ல முதல்வர் வாகனம் மறுபக்கத்தில் செல்லும். முதல்வர் பாதையில் எதிரில் வரும் வாகனங்கள் குறுக்கிடாமல் இருக்க சாலையின் நடுவில் போலீசார் நிற்பார்கள். இன்றும் அதே போல் முதல்வர் வருவதற்கு முன்னர் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
கடற்கரை விவேகானந்தர் இல்லம் அருகே போலீஸ் திவ்யா என்கிற 26 வயது பெண் பாதுகாப்பு பணியில் இருந்தார். சாலை நடுவில் நின்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்திகொண்டிருந்த பெண் காவலர் திவ்யா மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராத விதமாக மோதியது. இதில் இரண்டுபேரும் தூக்கி வீசப்பட்டனர்.
ரத்த வெள்ளத்தில் விழுந்த பெண் காவலர் திவ்யா மயக்கமானார். உடனடியாக அருகிருந்த போலீசாரும் பொதுமக்களும் இருவரையும் மீட்டு ராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பைக்கில் வந்து மோதியவர் பெயர் ப்ரவீன் என்றும், , வேல்டெக் கல்லூரியில் பயின்று வருகிறார் என்றும் தெரிய வந்துள்ளது.. இவருக்கு லேசான காயங்களே ஏற்பட்டது. ஆனால் பெண் காவலர் திவ்யா படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து சிந்தாதிரி பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Responses to முதல்வர் பாதுகாப்புக்கு நின்ற பெண் போலீஸ் மீது பைக் மோதல்: படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி