இலங்கையில் பெரும்பான்மையாகவுள்ள பௌத்த- சிங்கள இனத்துக்கு விசேட உரிமைகள் இருக்க வேண்டும் என்று அஸ்கிரிய மஹாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
பதுளை, முதியங்கன ரஜமஹா விகாரையில் அண்மையில் இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அஸ்கிரிய மஹாநாயக்கர் கூறியுள்ளதாவது, “நாட்டில் மிகக் குறைந்த நாட்களில் இல்லாமற் போகாத இனமான பௌத்த- சிங்களவர்களுக்கு விசேட உரிமைகள் இருக்கவேண்டும்.
சிறியவர்கள், பெரியவர்களின் செயற்பாடுகளையே முன்மாதிரியாக கொள்கின்றனர். பெரியவர்களின் செயற்பாடுகள் மிகவும் முக்கியமானதாகும். ஆகையால், தலைவர்கள் முன்மாதிரியாக இருத்தல் வேண்டும். அரசியல் அதிகாரமிக்கவர்கள் எந்நேரமும் முன்மாதிரியாக இருத்தல் வேண்டும். பௌத்தனாக இருத்தல் வேண்டும். அவர்களின் உணர்வுதான் முழு நாட்டின் மீதும் செல்வாக்கு செலுத்தும்.
ஆகையால், தேரர்கள், அரசியலில் அதிகாரமிக்கவர்கள், ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் முன்மாதிரியாக இருத்தல் வேண்டும். அவ்வாறு இருந்தால் நாங்கள் சந்தோசமடைவோம். இல்லையேல், நாட்டுக்காகவும் இனத்துக்காகவும் சில விடயங்களை நாங்கள் சொல்லவேண்டியிருக்கும்.
நாடு மற்றும் இனம் தொடர்பில் ஏதாவது நாங்கள் கூறினால், அவை தொடர்பில் அமைச்சர்களும் ஜனாதிபதியும் கவனஞ்செலுத்தவேண்டும். இந்த நாடு, இன்றோ அல்லது நாளைக்கோ நிறைவடைந்துவிடக்கூடாது. இந்த நாட்டில், சிங்கள-பௌத்தர்கள் இருக்கவேண்டும். பிரதான இனம் என்றவகையில் சிங்கள இனத்துக்கு விசேட உரிமைகளும் இருத்தல் வேண்டும், இனவாத்தை உருவாக்குவதற்கு நான் பேசவில்லை. சிங்களவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கவே நாங்கள் கதைக்கின்றோம். இவ்வாறு பேசுவதனால் இனவாதத்தை கக்குவதாக சிலர் கூறலாம். ஆனால், இனத்தை பாதுகாக்கவே நாங்கள் கதைக்கின்றோம்.” என்றுள்ளார்.

0 Responses to பௌத்த- சிங்கள இனத்துக்கு விசேட உரிமைகள் இருக்க வேண்டும்: அஸ்கிரிய மஹாநாயக்கர்