நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளின் ஆழத்தினைப் புரிந்து கொண்டு, புத்திக் கூர்மையுடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
“எழுபது ஆண்டுகளுக்கு முன்னர், 1946ஆம் ஆண்டு சிங்கள, முஸ்லிம், தமிழ், பேகர் என அனைத்து இன மக்களும் ஒரே இனமாக இருக்க வேண்டும் என்று டீ.எஸ்.சேனாநாயக்க கூறியதை இன்று நாமும் கூற வேண்டி ஏற்பட்டுள்ளது“ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 70வது தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது 62 இலட்சத்து 50,000 பேர் எமக்கு வாக்களித்தது நாம் முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகளுக்காகவே. அவற்றை நிறைவேற்றுவதற்கு நான் அர்ப்பணிப்புடன் உள்ளேன்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எமது ஸ்ரீலங்கா சுதந்தி கட்சியின் 65வது ஆண்டு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட யோசனைகளும், இன்று இங்கு முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையே. ஆகவே இரு கட்சிகளினதும் யோசனைகளில் ஒற்றுமை இருக்கிறது. இருகட்சிகளுடைய ஒற்றுமையான ஒரே யோசனையை கொண்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வோம்.
நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்து இனத்தவர்களுக்கும் பொருந்தக் கூடியவாறான புதிய அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
சில ஊடகங்கள் மக்களை தவறாக வழிநடத்துகிறது. ஆகவே பொய்யான செய்திகளை வெளியிட்டு மக்களை தவறாக வழி நடத்த வேண்டாம் என்று நான் ஊடகங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.” என்றுள்ளார்.

0 Responses to பிரச்சினைகளின் ஆழத்தை புரிந்து கொண்டு புத்திக் கூர்மையுடன் செயற்பட வேண்டும்: ஜனாதிபதி