காவிரி நதிநீர் பிரச்சனைத் தொடர்பாக முகநூலில் கருத்துக் பதிவிட்ட தமிழக இளைஞர் மீது பெங்களூருவில் கடுமையான தாக்குதல் நடத்தி உள்ளனர் கர்நாடக இளைஞர்கள்.
நேற்று, கன்னட நடிகர் - நடிகைகள், தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்தினர். இது குறித்து தமது முகநூலில் சம்பத் என்கிற தமிழக இளைஞர் கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். அதாவது, கன்னட நடிகர்-நடிகைகள் தமிழகத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், ஆனால், தமிழகத்தில் உள்ள நடிகர்-நடிகைகள் அப்படி இல்லை என்று பதிவிட்டு இருந்தார்.
இவரை எப்படியோ தேடிக் கண்டுபிடித்த கர்நாடக இளைஞர்கள், அவரை நடுரோட்டில் நன்றாக அடித்து துவைத்தனர். கூடவே கர்நாடகா வாழ்க, காவிரி கர்நாடகாவுக்கே சொந்தம் என்றும் முழக்கமிடச் செய்துள்ளனர். இதனால் தமிழக மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

0 Responses to காவிரி பிரச்சனை: பெங்களூருவில் தமிழக இளைஞர் மீது கடும் தாக்குதல்!