கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமித்து முகாம்களை அமைத்துள்ள இராணுவம், இரண்டு மாத காலத்துக்குள் அங்கிருந்து வெளியேறும் என்று மகளிர் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் பொதுமக்களின் காணிகளிலிருந்து வெளியேறிய பின்னர் கடந்த மாதம் வாக்குறுதியளித்தவாறு, இரண்டு மாத காலத்துக்குள் மக்களின் காணிகள் மக்களிடம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள காணிகளை மீட்டுத்தருமாறு கோரி போராட்டம் நடத்தி வந்த பொதுமக்களை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து உரையாடும் போதே விஜயகலா மகேஸ்வரன் மேற்கண்ட உறுதிமொழியை வழங்கினார். இதனையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

0 Responses to பரவிப்பாஞ்சானில் பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ள இராணுவம் இரண்டு மாதங்களுக்குள் வெளியேறும்: விஜயகலா மகேஸ்வரன்