வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை பதவி விலகக் கோரி பொது பல சேனாவின் ஏற்பாட்டில் வவுனியாவில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
வடக்கில் வாழ்ந்த சிங்களவர்களை மீள்குடியேற்ற கூடாது மற்றும் வடக்கின் மிகப் பழைமை வாய்ந்த பௌத்த விகாரையை கட்டக்கூடாது என்று சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதாக கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
உதுர ரகின- ரட்ட சுரகின வன்னி பலவேகய (வடக்கையும், நாட்டையும் காக்கும் வன்னி படையணி) எனும் பெயரைக் கொண்ட குறித்த ஆர்ப்பாட்டம் வவுனியா குளத்தில் ஆரம்பித்து, அங்கிருந்து வவுனியா மாவட்ட ஆணையாளரின் அலுவலகத்திற்குச் சென்று அங்கு மகஜர் கையளிப்புடன் நிறைவடைந்தது.

0 Responses to சி.வி.விக்னேஸ்வரனை பதவி விலகக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்; பொது பல சேனா நடத்தியது!