Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய தேசியக் கட்சியோடு இருக்கின்ற இணைப்பினை விட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தூய சுதந்திரக் கட்சி தம்மிடமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, "ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை எமது சுதந்திரக் கட்சியின் கொள்கைக்கு முரணானது. அடிபணிந்து இருக்க முடியாது. இதன் காரணமாகவே கட்சியின் மாநாட்டில் பங்கேற்காமல் இருப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சிலிருந்து வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எடுத்து வாருங்கள். தூயக் கட்சி எம்மிடமே இருக்கின்றது. அதன் பின்னர் மாநாடு பற்றி பரிசீலிக்கலாம்.” என்றுள்ளார்.

0 Responses to ஐ.தே.க கூட்டிலிருந்து வெளியேறுங்கள்; சுதந்திரக் கட்சிக்கு மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com