Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேசிய பாதுகாப்பினை முழுமையாக உறுதிப்படுத்திய பின்னரே, யாழ்ப்பாணத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவம் அறிவித்துள்ளது. 

இதனால், இராணுவ முகாம்களுக்குத் தேவையான காணிகள் தொடர்ந்தும் வைத்துக்கொண்டு ஏனைய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளதாவது, “இராணுவ முகாம்கள் சில காரணங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களுக்கு தேவையான இடத்தின் அளவு குறித்த வரையறை காணப்படுகின்றது. ஆகவே இராணுவ முகாமிற்கு தேவையற்ற மேலதிகமான அனைத்து காணிகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனினும், எந்தெந்த இடங்கள் விடுவிக்கப்படுமென எங்களால் கூற முடியாது. காரணம் பொதுமக்களின் வேண்டுகோளை கருத்திற்கொண்டு அது தொடர்பில் ஆராய்ந்து, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் காணப்படாத காணிகளை விடுவிப்பதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

தற்போது காணப்படும் சமாதான சூழலையும் கருத்திற் கொண்டு, புலனாய்வாளர்களின் அறிக்கைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தி பொது மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டின் தென்பகுதியிலும் இராணுவ முகாம்கள் காணப்படுகின்றன. வடக்கிலும் இராணுவ முகாம்கள் காணப்படுகின்றன. பாதுகாப்பு தேவை கருதி தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவறதற்காகவே அவைகள் அமைக்கப்பட்டுள்ளன.

காணிகளை விடுப்பது தொடர்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆகவே எந்தெந்த காணிகளை விடுவிப்பது என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை. ஆகவே தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் அதனை உறுதிப்படுத்திக்கொண்டு. காணிகளை விடுவிப்பது தொடர்பில் அவதானம்  செலுத்தியுள்ளோம்.” என்றுள்ளார்.

0 Responses to தேசிய பாதுகாப்பினை உறுதி செய்த பின்னரே, யாழில் மீதமுள்ள காணிகள் விடுவிக்கப்படும்: இராணுவம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com