பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோசித்த ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை அனுமதியளித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் வைத்தியப் பரிசோதனை செய்யவுள்ளதாக கோரி குறித்த மனுவை கொழும்பு மேல் நீதிமன்றில் யோசித்த ராஜபக்ஷ சமர்ப்பித்ததையடுத்து குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யோசித்த ராஜபக்ஷ மீது நிதி மோசடி குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு நடைபெற்று வருவதால் அவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கடுவலை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், மேல் நீதிமன்றம் வெளிநாடு செல்ல அனுமதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

0 Responses to யோசித்த ராஜபக்ஷ வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி