மாகாண அரசாங்கத்தின் அதிகாரத்துக்கு கீழ் வரும் விடயங்கள் உள்ளிட்ட பல வேலைகளை மத்திய அரசாங்கம் மாகாண அரசாங்கத்துக்கு அறிவிக்காமல் செய்வதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அபிவிருத்தி தேவைகளுக்கான காணிகளை மாகாண அரசாங்கம், மத்திய அரசாங்கத்துக்கு உரிமத்துடன் வழங்க முடியாது எனவும் அந்தக் காணிகள் எதிர்காலத்தில் வேறு தேவைகளுக்கு பயன்படக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் தலைமையில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மாகாண அரசாங்கத்துக்குா, மாவட்டச் செயலகங்களுக்கோ தெரியாத பல பணிகளை மத்திய அரசாங்கம் முன்னெடுத்து வந்துள்ளது. அபிவிருத்தி திட்டங்களுக்காக மாகாண அரசிற்கான காணிகளை மத்திய அரசாங்கத்திற்கு உரிமத்துடன் வழங்க முடியாது.
அவ்வாறு வழங்குதல் எதிர்காலத்தில் வேறு பல பிரச்சினைகளை கொண்டு வரக்கூடும். அத்தோடு மத்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திகள் வெற்றியளிக்கவில்லை. எனவே, அவர்கள் வேறு தேவைகளுக்கு காணிகளை பயன்படுத்த முடியும். இருப்பினும் இது விரும்பத்தக்கது அல்ல. பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான காணியை மாங்குளத்தில் நீண்ட கால குத்தகைக்கு தரலாம் என்றே தாங்கள் மத்திய அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளோம்.” என்றுள்ளார்.

0 Responses to மாகாண அரசாங்கத்தின் அதிகாரங்களை மீறும் வகையில் மத்திய அரசாங்கம் செயற்படுகின்றது; சி.வி.விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு!