புதிய அரசியலமைப்பு வெளியாகும் முன்னரே, அதனால் நாட்டுக்கு அச்சுறுத்தல் என்று சிலர் கூறி வருவதை ஏற்க முடியாது என்று மல்வத்து பீடத்தின் மஹாநாயக்க திப்படுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்ட அக்கட்சியின் குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை மஹாநாயக்க தேரரைச் சந்தித்து உரையாடினர். அதன்போதே, மஹாநாயக்க தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த மல்வத்து பீட மஹாநாயக்கர், “புதிய அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதியோ பிரதமரோ நாட்டுக்கு தீங்குவிளைவிக்கும் எதனையும் செய்யமாட்டார்கள் என்று உறுதி கூறியுள்ளனர். எனவே அதுதொடர்பாக நாம் அச்சம் கொள்ளத் தேவையில்லை. புதிய அரசியலமைப்பு இன்னும் வெளிவரவில்லை அது பற்றி மக்களுக்கு தெரியாது. ஆகவே இது தொடர்பாக அவ்வாறு இருக்கும் இவ்வாறு இருக்குமென மக்கள் மத்தியில் பிரசாரங்கள் செய்வது பிழையானதொரு செயற்பாடாகும்.” என்றுள்ளார்.
இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, “புதிய அரசியலமைப்பு மூலம் வடக்கையும் கிழக்கையும் இணைத்து, நிதி அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு வழங்குவதற்கு அரசு திட்டமிடுகின்றது. இது கடல் கடந்த புலிப்பயங்கரவாதிகளின் தேவைகளை நிறைவு செய்யும் நோக்கிலானது.” என்றுள்ளார்.

0 Responses to புதிய அரசியலமைப்பு நாட்டுக்கு அச்சுறுத்தலானது என்று கூறுவதை ஏற்க முடியாது: மல்வத்து பீட மஹாநாயக்கர்