சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில்தான் இறந்தார் என்று ஜப்பான் விசாரணை அறிக்கைக் குழுத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
நேதாஜி ஜப்பான் நாட்டின் தைவான் நகரில் விமான விபத்தில் இறந்தார் எனும் தகவலில் உண்மை இல்லை என்றும், நேதாஜி மரணத்தில் மர்மம் நீடிக்கிறது என்றும் இந்தியாவில் பரவலாக கருத்துக்கள் கூறப்பட்டது. இதையடுத்து மேற்கு வங்க அரசு மற்றும் மத்திய அரசு நேதாஜி குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்டது.இருப்பினும் மர்மம் நீடித்து வந்த நிலையில் ஜப்பான் நாடு, நேதாஜி தாய்வான் நாட்டின் தைவான் நகரில் விமான விபத்தில்தான் இறந்தார் என்றும், ஜப்பான் நாட்டு விசாரைக் குழு அறிக்கையின் ஆவணங்கள் இதைத்தான் சொல்கின்றன என்றும் தெரிவித்துள்ளது.
அதாவது 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி தைவான் நகரில் ஏற்பட்ட விமான விபத்தில்தான் நேதாஜி உயிரிழந்தார் என்றும், அவரது உடல் தைவான் நகராட்சியின் தகன மேடையில் அதே ஆகஸ்ட் மாதம் 22ம் திகதி தகனம் செய்யப்பட்டது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும், நேதாஜி மரணம் குறித்த விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய ஜப்பான் நாட்டு அரசு மூன்று விசாரணைக்கு குழுக்களை அமைத்தது என்றும், அதில் இரண்டு குழுக்களின் விசாரணை அறிக்கை மட்டுமே நேதாஜி தைவான் நகர் விமான விபத்தில் இறந்தார் என்று தெரிவித்துள்ளது என்பதும் இவ்வேளையில் குறிப்பிடத்தக்கது.

0 Responses to நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில்தான் இறந்தார்: ஜப்பான் திட்டவட்டம்