ஒரு குரங்கை கொன்று புதைத்துவிட்டு வந்து கூறினால், 300 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று ஹிமாச்சல் பிரதேச வனத்துறை அறிவித்துள்ளது.
ஹிமாச்சல் பிரதேசம் சிம்லாவில் குரங்கள் மிக வேகமாக இனப்பெருக்கம் செய்து வருகின்றன என்றும், இங்கு குரங்குகள் இனம் பெருத்து சுற்றுலா வரும் மக்களுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றன என்றும் வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே,பெருகி வரும் குரங்குகளை கட்டுப்படுத்த வேறு வழியின்றி அவற்றை கொன்றுவிட முடிவு செய்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதன் படி ஒரு ஆண்டு காலம் இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்றும், ஒருகுரங்கை கொன்று புதைத்துவிட்டு வந்து சொல்பவர்களுக்கு 300 ரூபாய் பரிசளிக்கப்படும் என்றும் வனத்துறை அறிவித்துள்ளது. வனத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டு இரண்டு மாதங்கள் ஆகியும், இன்னமும் ஒரு குரங்கையும் கொன்றபாடில்லை என்றும், அவைகள் ஆபத்து எனும்போது லாவகமாகத் தப்பி விடுகின்றன என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், ஆஞ்சநேயரின் அம்சமாக கருதப்படும், மக்களால் இன்னமும் பக்தியுடன் மதிக்கப்படும் குரங்குகளை கொல்ல மக்களுக்கு இன்னமும் மனம் வராததே இன்னமும் ஒரு குரங்கும் கொல்லப்படாமல் இருக்கக் காரணம் என்றும் மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.ஒரு உயிரை கொல்வது என்பது, அதுவும் மனித இனத்தின் முன்னோடிக்கு அடையாளமாகக் கருதப்படும் குரங்கை கொலை செய்வதுதான் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வா, இந்த விஞ்ஞான உலகத்தில் இப்படி ஒரு அவல நிலையா என்று சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

0 Responses to அவலம்: ஒரு குரங்கை கொன்றால் 300 ரூபாய் பரிசு: ஹிமாச்சல் வனத்துறை!