இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளரான பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
போர்க்குற்ற விசாரணைகளுக்காக இலங்கை அரசாங்கம் அமைக்கவுள்ள உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கு வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்க வேண்டும் என்ற விடயத்தில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அழுத்தம் கொடுக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் அறிவித்திருந்தமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பர்ஹான் ஹக் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் இலங்கை விடயத்தில் மிகத் தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதாகவும், இதனை ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக வெளியிட்டுவரும் அனைத்து அறிக்கைகளிலும் மிகத் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to இலங்கை தொடர்பிலான ஐ.நா.வின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை: பர்ஹான் ஹக்