கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல, மக்கள் நல கூட்டணி உள்ளாட்சித் தேர்தலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஒரு அறிக்கை விடுத்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் பம்பரம் சின்னத்தில் மதிமுக போட்டி என்கிற அறிக்கைதான் அது.
வைகோ தமது அறிக்கையில் மக்கள் நல கூட்டணி இனி இல்லை என்று அறிவிக்கவில்லை. ஆனால், மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிடுகிறது என்று மட்டும் அறிவித்துள்ளார். அந்த அறிக்கையில், தமிழ்நாட்டில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பம்பரம் சின்னத்தில் போட்டியிட, மாநிலத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும், கழக வேட்பாளர்கள் பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவார்கள். அதற்குரிய ஆவணங்களை மாவட்டச் செயலாளர்களை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன் என்றும் வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.

0 Responses to சிதறியதா மக்கள் நலக் கூட்டணி?: மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டி!