இந்திய திரைப்படங்களில் பாகிஸ்தான் கலைஞர்கள் பணியாற்ற வேண்டாம் என்று, இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் காஷ்மீர் எல்லையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து பயங்கரவாதிகள் இந்திய ராணுவ எல்லைகளை குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதில் 18 வீரர்கள் பலியாகி உள்ளனர். இந்நிலையில்,மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சி, பாகிஸ்தான் கலைஞர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. அப்படி அவர்கள் வெளியேறவில்லை என்றால், அவர்களை தங்களது பாணியில் வெளியேற்றுவோம் என்றும் அக்கட்சி அறிவித்திருந்தது.
இந்த நிலையில், இந்தியா நேற்று பாகிஸ்தான் எல்லையில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்குத் தக்க பதிலடி கொடுத்தது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. எனவே, பாகிஸ்தாநிலிருந்து வந்து இந்திய படங்களில் நடிக்கும் கலைஞர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் இனி இந்திய படங்களில் பணியாற்ற வேண்டாம் என்றும், அவர்கள் தங்களது பணிகளை நிறுத்திவிட்டு, நாட்டுக்குத் திரும்பிவிடுவது நல்லது என்றும் இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

0 Responses to இந்தியத் திரைப்படங்களில் பாகிஸ்தான் கலைஞர்கள் பணியாற்ற வேண்டாம்: தயாரிப்பாளர்கள் சங்கம்