மாகாண ஆளுநர்கள், ஆளுநர்களாக மாத்திரம் இருக்க வேண்டும். மாறாக, மாகாணங்களின் ஆட்சியதிகாரத்தில் தலையீடு செய்து ஆள்பவர்களாக மாறக் கூடாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாகாணங்களைப் பரிபாலிக்கும் பொறுப்பு, நிர்வகிக்கும் அதிகாரம், மாகாண மக்கள் பிரதிநிதிகளுக்கே வழங்க வேண்டும். நிர்வாகப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமானால், இந்தியாவைப் போலவே இங்கும் ஆளுநர்கள் ஆளுநர்களாகவே இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். மாவட்டச் செயலகத்தில் 4 மாடிகளைக் கொண்ட புதிய நிர்வாகக் கட்டடத் தொகுதித் திறப்பு விழாவும், நினைவுக்கல் திரை நீக்கமும் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “புதிய அரசியலமைப்பினைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அதிகாரப் பரவலாக்கல் ஆரோக்கியமாக நடைபெறும் என்று தமிழர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், பல் நிர்வாக அலகுகளை நீக்கி ஒற்றுமைப்பட்ட ஒரே மாகாண நிர்வாகம் நடைபெற பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழிவகுக்க வேண்டும்.
மாகாணங்களைப் பரிபாலிக்கும் பொறுப்பு, நிர்வகிக்கும் அதிகாரம், மாகாண மக்கள் பிரதிநிதிகளுக்கே வழங்க வேண்டும். ஆளுநருக்கு ஒரு அதிகார அலகு, மாவட்ட செயலாளர்களுக்கு ஒரு அலகு, எமக்கு இன்னொரு அலகு என்றிருந்தால் மாகாணம் உருப்படாமல் போய்விடும். முரண்பாடுகளே மிஞ்சும்.
இவற்றைத் தவிர்ப்பதென்றால் இந்திய நாட்டின் அதிகார அலகுகளின் ஆளுநர்கள் போலவே இங்கும் ஆளுநர்கள் ஆளுநர்களாக இருக்க வேண்டுமே ஒழிய ஆள்பவர்களாக மாறி விடக் கூடாது.” என்றுள்ளார்.

0 Responses to ஆளுநர்கள் ஆள்பவர்களாக மாறக் கூடாது; மாகாண அதிகாரங்கள் மக்கள் பிரதிநிதிகளிடமே இருக்க வேண்டும்: விக்னேஸ்வரன்