Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் எதிர்கால நன்மைக்காக தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாக  தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் இந்து சமுத்திர மாநாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, நிஷா தேசாய் பிஸ்வால் சந்தித்து பேசியுள்ளார். அதன்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, கண்டி - கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை பொருளாதார வலயத்தின் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையை அண்மித்த அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் இங்கு பேசப்பட்டுள்ளது.

அத்துடன், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களின் வாழ்க்கையை சுமூக நிலைக்கு கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நீண்ட கால மற்றும் நிலையான வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் இருவருக்குமிடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

0 Responses to இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா தயார்; ரணிலிடம் நிஷா பிஸ்வால் தெரிவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com