Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை வந்திருந்த ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனைச் சந்திக்க, தான் உள்ளிட்ட வடக்கு மாகாண அமைச்சர்கள் குழுவுக்கு ஆறு நிமிடங்களை மாத்திரமே வழங்கினார்கள் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை மதியம் வருகை தந்த ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்துக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “பான் கீ மூன், யாழ்ப்பாணத்திற்கு வருகை தர தாமதமானதால் எல்லா  நிகழ்வுகளும் தாமதாகி விட்டது. ஒரு மணித்தியாலம் காத்திருந்தோம். அதன் பின்னர் அவரது அலுவலகர் வந்து நீங்கள் வெறுமையே கைலாகு  கொடுத்துவிட்டு அவரை வழியனுப்பி விடுங்கள் என கேட்டார். அதற்கு நாம் மனவருத்தத்தை தெரிவித்தோம். பின்னர் சரி  ஆறு நிமிடங்கள் ஒதுக்கி தரலாம் என ஆறு நிமிடங்கள் மாத்திரமே ஒதுக்கி தரப்பட்டது.

ஆறுநிமிட பேச்சு தான் எமக்கு இடையில் நடைபெற்றது.  இது  இப்படி  தான்  நடக்கும் என  முன்னரே  நான்  ஊகித்துக் கொண்டதால், எங்கள் பிரச்சனைகள் தொடர்பில் உரிய ஆவணங்களை தயாரித்து அவற்றை  எல்லாம் அவரிடம் கையளித்து உள்ளேன். 

காணாமற்போனவர்கள் சுமார் 4 ஆயிரம் பேர் தொடர்பிலான விபரங்களை ஒரு புத்தக வடிவில் கையளித்து உள்ளேன். விடுவிக்க படவேண்டிய காணிகள் தொடர்பிலான அறிக்கைகளும் கையளித்து உள்ளேன். இவ்வாறு ஒவ்வொரு விடயம் தொடர்பிலான பல்வேறு தகவல்களை கொடுத்து இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை ஐக்கிய நாடுகளுக்கு இருக்கின்றது என குறிப்பிட்டு உள்ளேன்.

அத்துடன் 2009ஆம் ஆண்டு இங்கு வந்திருந்த போது மனித உரிமை சம்பந்தமாக சகல நடவடிக்கைகளையும் எடுப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டது. ஆனால் பயங்கரவாத தடை சட்டம் இதுவரை நீக்க படவில்லை.  அடுத்து போர் குற்றம் தொடர்பிலான பொறிமுறை தொடர்பில் இன்னமும் எந்த முன்னேற்றமும் இல்லை என குறிப்பிட்டுக் காட்டினேன்.” என்றுள்ளார்.

0 Responses to பான் கீ மூனைச் சந்திக்க ஆறு நிமிடங்கள் மாத்திரமே ஒதுக்கினார்கள்: சி.வி.விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com