இறுதி யுத்தம் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது என்பதை தான் வெளியிடவுள்ள நூல் தெளிவாக முன்வைக்கும் என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை விவாதமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளதாவது, “நான் விரைவில் நூல் ஒன்றை வெளியிட உள்ளேன். அதில், யுத்தம் பற்றிய முழு விபரங்களையும் வெளியிட உள்ளேன். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்த மேலும் இராணுவ அதிகாரிகளும் நூல் வெளியிடுவார்கள். எவ்வாறெனினும், இராணுவத் தளபதி என்ற ரீதியில் யுத்தம் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது என்பதனை தெளிவாக என்னால் விபரிக்க முடியும்.” என்றுள்ளார்.

0 Responses to இறுதி யுத்தம் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது என்பதை எனது நூல் தெளிவாக முன்வைக்கும்: பொன்சேகா