Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட லடூர் மாவட்டத்தில், குடிதண்ணீரை வீணடித்த 3 அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள லடூர் பகுதி கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டது. அங்கு மக்கள் குடிதண்ணீரின்றி தவித்து வந்தனர். இதனையடுத்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. தொடரந்து அங்கு நிலைமை மேம்பட்டதை தொடர்ந்து, 15 நாட்களுக்கு ஒரு முறை குழாய்மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி அங்குள்ள குழாய்கள் மூலம் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டது. யாரும் கவனிக்காததால் தண்ணீர்  நிரம்பி வீணாணது. 

இவ்வாறு 1.5 லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாணது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் பன்டுராங் போல் இது குறித்து விசாரணை நடத்தினார். விசாரணையை தொடர்ந்து, இதற்கு பொறுப்பான முதல்நிலை அதிகாரி மற்றும் இரண்டு உதவி அதிகாரிகளின் சம்பள உயர்வை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

0 Responses to மகாராஷ்டிராவில் தண்ணீரை வீணடித்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வு நிறுத்தம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com